ஞாயிறு, 24 மே, 2020

அந்த சிறுமி ...இன்று எங்கே?

எனக்கு அந்த சிறுமியை வெகு காலமாக தெரியும். அவள் பிறந்ததிலிருந்தே தெரியும் என்று கூட கூறலாம்அவளுடைய அடிப்படைத் தன்மை சிறுவயதிலிருந்தே சற்று வித்தியாசமானதாகவே இருந்தது. அன்பானவள்யாருக்கும் அடங்காதவள்உதாரணமாக அவள் அவளுடைய அண்ணனிடம் அடிக்கடி அடி வாங்குவாள். யார் என்ன செய்தாலும் தட்டிக் கேட்பவள்அதன் காரணமாகவே அவள் தன் தந்தைக்கு எப்பொழுதும் தலைவலியாக விளங்குபவள் கொஞ்சம் அதிகப்படியாகக் கூறுவது போல் இருக்கிறது அல்லவா? அவள் வாழ்வில் நடந்த ஒரு காரியத்தை எழுதுகிறேன் அப்பொழுது அவள் எப்படிப்பட்டவள் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.


அப்பொழுது ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். ஒருநாள் இரவு ஒன்பது மணி அளவு இருக்கும், அவளும் அவளது வீட்டு உதவியாளரும் உட்கார்ந்து சம்பாஷித்து கொண்டிருந்தனர்திடீரென அவர்கள் வாசல் கதவு தட்டும் சத்தம் கேட்டது. வீட்டில் அப்பா இல்லைஇந்த நேரத்தில் யார் தட்டுவது என்ற கேள்வியோடு இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். நேரம் ஆக ஆகத் தட்டப்படும் சத்தத்தின் வேகம் கூடத் தொடங்கியது தைரியத்தை எல்லாம் திட்டிக் கொண்டு அந்த சிறுமி கதவைத் திறந்தாள்.

கதவின் அந்தப்புறம் ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி கண்ணில் கண்ணீரோடு, உடம்பெல்லாம் பதைபதைக்க, மிகவும் பதற்றத்தோடு நின்று கொண்டிருந்தார்.கதவை திறந்தது சிறுமி என்று பார்த்ததும் அந்த நடுத்தர வயது பெண்மணிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை (மன்னிக்கவும் அந்த நடுத்தர வயதுப் பெண்ணின் பெயர் இன்றுவரை அந்த சிறுமிக்குத் தெரியாது). அந்த சிறுமியைத் தாண்டி உள்ளே எட்டிப் பார்த்தபோது அந்த சிறுமியின் உதவியாளர் இருப்பதைப் பார்த்தவுடன் சற்று நிம்மதியாகப் பெருமூச்சு விட்டார்.அந்த சிறுமியின் உதவியாளரைப் பார்த்து “அம்மா சீக்கிரம் ஓடி வாங்க எனது மகள் ரோட்டில் கிடைக்கிறாள். சீக்கிரத்தில் குழந்தை பிறந்துவிடும் என்று நினைக்கிறேன் கொஞ்சம் ஓடி வாங்களேன்” என்று கூப்பிட்டார்.

அதைக் கேட்ட அந்த சிறுமி ஒரு கணம்கூட யோசிக்கவில்லை வாங்க அக்கா போகலாம் என்று அந்த உதவியாளர் அழைத்துக்கொண்டு அந்த நடுத்தர வயது பெண் குறிப்பிட்ட இடத்திற்கு ஓடிச் சென்றாள்குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் அவள் கண்ட காட்சி அவள் கண்களாலேயே நம்ப முடியவில்லை. ஒரு இளம் பெண் பனை கிழங்கு நிறத்தில் ஒரு குழந்தையைக் கையில் ஏந்தியபடி அமர்ந்து இருந்தாள். கயிறு போன்ற ஒன்று குழந்தையின் தொப்புள் வழியாகத் தொங்கிக்கொண்டிருந்தது . அந்த நடுத்தர வயது பெண்மணி “பாருமா குழந்தை பிறந்துவிட்டது, நடுரோட்டில் இப்படி ஆயிருச்சு, தொப்புள் கொடி கட்ட கூட ஆள் இல்லை, ஏதாவது கத்தி இருந்தால் கொண்டு வாங்க” என்று கேட்டார்அந்த சிறுமி கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லைஅந்த சம்பவம் நடந்த இடத்திலிருந்து இரண்டு அடி எடுத்து வைத்தால் ஒரு வீடு இருந்தது .அது அந்த சிறுமியின் ஜென்ம பகை வீடுஇந்த நேரத்தில் பகையைப் பொருட்படுத்தக் கூடாது என்று அந்த சிறுமிக்கு அப்போதே தெரிந்திருந்தது. எதையும் யோசிக்காமல் அந்த வீட்டின் கதவைத் தட்டினாள்.அந்த வீட்டின் கதவு திறக்காது என்று தெரிந்தும் தட்டினாள்ஏற்கனவே அந்த நடுத்தர வயது பெண் தட்டிய பொழுதும்அந்த வீட்டில் கதவு திறக்கவில்லைஎன்ன செய்வது என்று யோசித்தாள் ஏனென்றால் அவள் இருந்த இடத்திலிருந்து அவள் வீட்டிற்குச் சிறிது தூரம் நடக்க வேண்டும்கண நேரம் யோசித்து விட்டு பின்பு விருட்டென்று ஓடிதன் வீட்டின் கதவைத் திறந்து காய்கறி வெட்டும் கத்தியை எடுத்துக்கொண்டு ஓடி வந்தான். கும்மிருட்டு வழியாக அந்த காட்டுப் பாதையில் ஓடியபோது, அவள் மனதிலிருந்த எண்ணம் எல்லாம் ஒன்றுதான். அந்த இளம் தாய்க்கு உதவ வேண்டும் என்பது மட்டுமே.

அந்தக் குழந்தையின் வயிற்றில் தோன்றிய கயிறுக்கு பெயர் தொப்புள்கொடி என்பது இன்று அவளுக்குத் தெரியும். நடுத்தர வயது பெண் தொப்புள் கொடியை வெட்டின பிறகு, இந்த சிறுமியின் வீட்டிற்கு அந்த இளம் தாயை அழைத்து வந்தனர்அந்த நடுத்தர வயது தாயும், நிறைமாத கர்ப்பிணியும் எங்கள் கிராமத்திலிருந்து அடுத்த கிராமத்திற்குக் கடைசி வண்டியில் பிரயாணித்து கொண்டிருந்தனர் என்றும், வண்டியில் ஏறிய உடன் வலி வந்ததால் நடத்துநர் வண்டியை விட்டு இறக்கி விட்டதாகவும் அந்த நடுத்தர வயது தாய் அழுது கொண்டே கூறினாள். அந்தப் பேருந்து நடத்துரின் செயல் ஆட்சேபிக்க தக்கத்து என்பது கூட யோசிக்கத் தெரியாத வயதில் அந்த சிறுமி இருந்தாள். அவளுடன் சுற்றியிருந்த பெண்மணிகள் நடத்துநரைத் திட்டியதை கேட்டுக்கொண்டிருந்தாள்.அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது சிறுமியின் தந்தை வந்து விட்டார் . குழந்தையை ஈன்றெடுத்த அந்த தாய் அந்த சிறுமியிடம் கூறினாள் “எனது குழந்தைக்கு நீ தான் பெயர் வைக்க வேண்டும் என்று”அந்த வயதில் அந்த சிறுமிக்கு, அந்த தருணம் அவள் வாழ்வில் மிகவும் முக்கியமான தருணம் என்பது தெரியவில்லை. குழந்தைக்குப் பெயர் வைக்கும் வாய்ப்பு எல்லோருக்கும் அமையாது என்ற உண்மையும் அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.


இப்பொழுது ஒப்புக்கொள்கிறீர்களா நான் அவளது தன்மையை மிகைப்படுத்திக் கூறவில்லை என்பதை? ஆனால் கட்டுரை அவளது உதவியைப் பற்றியது அல்லஅந்த சிறுமிக்கு என்ன ஆனது என்பதைப் பற்றியதுஅந்த சிறுமிக்கு இப்போது வயது 30க்கு மேல் ஆகிவிட்டது. அவள் படித்தாள், பட்டம் பெற்றாள்திருமணம் புரிந்தாள்குழந்தைகளை ஈன்றெடுத்தாள். இன்று அவள் கண்களுக்கு, கண்முன் நடக்கும் அநியாயம் தெரியவில்லைஉதவிக்காக அவள் கண்முன் ஏந்தி நிற்கும் கைகளைத் தெரியவில்லைஅவளுக்கு எதிர்த்துப் பேசத் தைரியம் இல்லைகூண்டை விட்டு வெளியே வர விருப்பமும் இருந்த மாதிரி தெரியவில்லையாருக்காகவோ பயந்து, எதற்காகவோ வெட்கப்பட்டு, எதைக்கண்டோ ஒளிந்துஇன்று புனை பெயர் வைத்துக் கொண்டு கட்டுரை எழுதிக் கொண்டிருக்கிறார்அவளைச் சிறுவயதில் இருந்தே பார்த்த சிலர் இப்பொழுது அவளைப் பார்த்து நீ வாழ்வில் முதிர்ச்சி அடைந்து விட்டாய், இப்பொழுதுதான் வாழ்வின் உண்மையை உணர்ந்து ஒழுங்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாய் என்றனர். ஆனால் அவளுக்கு மட்டும் தான் தெரியும் அவள் வாழ்க்கை அவள் தேடலை நோக்கிச் செல்ல வில்லை என்பது. அவளுடைய கேள்வி எல்லாம் அந்த சிறுமி ன்று எங்கே என்பதுதான்உங்களில் யாருக்காவது அவளை மீண்டும் வெளிக்கொணர வைக்கும் வழி தெரியுமா?


தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ

என்ற பாரதியாரின் கவிதை கேற்ப திரும்ப எழுந்து நிற்க வேண்டும் என தோன்றியது. எனவே என்னோடு, உங்களையும் சேர்த்துக்கொண்டு என்னுள் புதைந்து விட்ட அந்த சிறுமியை தேடத் தொடங்கி விட்டேன். எல்லோரும் நம்முள் இருக்கும் அந்த சிறுமியை தேடுவோம் வாருங்களேன்!